
Dr. விஜயலட்சுமி ஞானசேகரன்
M.B.B.S., M.D.G.O., F.I.C.O.G.
Dr. M.B.B.S., M.D.G.O., F.I.C.O.G. பேராசிரியர், மகப்பேறு மற்றும் மகளிர் நலத்துறை A.C.S. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை - 77
சென்னையில் பிறந்து வளர்ந்து, இளங்கலைப் பட்டமும் (M.B.B.S), முதுகலைப் பட்டமும் (M.D.G.O) சென்னை மருத்துவக் கல்லூரியில் (M.M.C) பயின்று பல்வேறு தகுதிகளில் பணியாற்றி, தற்சமயம் A.C.S. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பேராசிரியர் மற்றும் கூடுதல் துறைத் தலைவராகப் (Professor & Additional HOD) பணியாற்றுகிறார்.
இவருக்கு மிகவும் ஆர்வமுள்ள துறைகள் : அதிக ஆபத்துள்ள மகப்பேறு சிகிச்சை (High Risk Pregnancy Care), (Adolescent Health Care), குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவம் (Fertility Treatment); மேலும் லாப்ரோஸ்கோபி (Laparoscopy / Keyhole Surgery).
அயனாவரத்தில் உள்ள தனது சக்தி மகப்பேறு மருத்துவமனையில் பலருக்கும் குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவம் (Fertility Treatment) அளித்து குழந்தை பாக்கியம் பெறச் செய்தவர்; மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவத்தை (Normal Delivery) உறுதி செய்ய மிகுந்த கவனம் செலுத்துபவர். இவர் OGSSI, FOGSI, TNFOG, IMA, IMS, IAGE இன் உறுப்பினர், மற்றும் சில செயற்குழுக்களில் உறுப்பினராவார்.